search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acknowledgment Slips"

    • நெல்லை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
    • பொதுமக்களுக்கு வழங்கும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரிக்கை

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் அடிப்படை வசதிகள் உள்பட தங்களது புகார்களை மனுவாக மேயரிடம் கொடுத்து வருகின்றனர்.

    இது தவிர சமூக ஆர்வலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும், நாளில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் காலை 10 மணிக்கே வந்து விடுகின்றனர்.

    முகாம் தொடங்குவதற்கு 12 மணி ஆகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே வாரம்தோறும் முறையான நேரத்தில் அதிகாரிகள் வந்து மனுவை பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவ்வாறு மேேயரால் வர முடியவில்லை என்றாலும் அதற்கான பொறுப்பு அதிகாரியை நியமித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விட வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கு முன்பு மனுக்களை பெற்றுக் கொண்டதும் மாநகராட்சி சார்பில் அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். ஆனால் தற்போது மனு அளித்ததற்கான எந்தவித ஆதாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை.

    எனவே ஒப்புகை சீட்டு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு–ள்ளது.

    ×