என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » actor senthil
நீங்கள் தேடியது "actor Senthil"
பிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil
போடி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.
தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil

நகைகளை அடமானம் வைத்ததையும், விற்றதையும் மறைப்பதற்காக வங்கியில் இருந்து நகை எடுத்து வரும்போது கொள்ளை போனதாக நடிகர் செந்திலின் உறவினர் நாடகமாடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. #JewelRobbery
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பழைய தாலுகா அலுவலக வீதியைச் சேர்ந்தவர் குருவலிங்கம். இவரது மனைவி உமா (வயது 43).
இவர் கமுதி போலீசில் கொடுத்த புகார் மனுவில், தான் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த 300 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பறித்துச்சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.
பட்டப்பகலில் நடைபெற்றதாக கூறப்பட்ட இந்த சம்பவம் கமுதி போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வழிப்பறி திருடர்களை பிடிக்க அனைத்து பகுதி போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால் உமா குறிப்பிட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிள் எதுவும் சென்றதாக பதிவாகவில்லை.
இதனால் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம், கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவரது பேச்சு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து உமாவிடம் கிடுக்கிப்படி கேள்வி கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் அவரை ரகசிய இடம் கொண்டு சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் 300 பவுன் நகை வழிப்பறி என உமா நாடகமாடுவது அம்பலமானது. இதுபற்றி போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
வழிப்பறி நாடகமாடிய உமாவின் சகோதரி சண்முக வடிவு. இவரது கணவர் பூபதிராஜா. சினிமா பட தயாரிப்பாளர். இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் உறவினர்கள்.
சென்னையில் வசிக்கும் சண்முகவடிவு, தனக்குச் சொந்தமான 300 பவுன் நகைகளை சகோதரி உமாவிடம் கொடுத்து ராமநாதபுரம் மாவட்ட வங்கி லாக்கரில் வைக்கும்படி தெரிவித்துள்ளார்.
அதனை பெற்றுக் கொண்ட உமா, வங்கி லாக்கரில் நகைகளை வைக்கவில்லை. 150 பவுன் நகைகளை 8 வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். மீதமுள்ள நகைகளை விற்றுவிட்டார்.
வங்கி லாக்கரில் தானே நகைகள் இருக்கிறது என்று சண்முகவடிவு நினைத்து அதுபற்றி உமாவிடம் எதுவும் கேட்கவில்லை.
இந்த நிலையில் சண்முகவடிவு மகனுக்கு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று திருமணம் நடக்க முடிவானது. இதனை முன்னிட்டு வங்கி லாக்கரில் இருக்கும் 300 பவுன் நகைளை எடுத்து வரும்படி சண்முகவடிவு கூறினார். இதனால் உமா அதிர்ச்சி அடைந்தார்.
நகைகளை அடமானம் வைத்ததையும், விற்றதையும் மறைத்து விட்டு, வங்கியில் இருந்து எடுத்து வரும்போது வழிப்பறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியுள்ளார்.
ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் நாடகம் அம்பலமாகி விட்டது. இந்த விவகாரத்தில் உமாவுக்கு வேறு யாரும் உதவி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery

நடிகர் செந்தில் உறவினரிடம் பட்டப்பகலில் 300 பவுன் நகையை வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். #JewelRobbery
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குருவலிங்கம். அவருடைய மனைவி உமா (வயது 43). இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் நெருங்கிய உறவினர்கள். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கமுதி கிளையில் சுமார் 300 பவுன் நகையை உமா லாக்கரில் வைத்திருந்தார்.
வருகிற 30-ந்தேதி அருப்புக்கோட்டையில் நடைபெறும் விழாவில் அணிவதற்காக, லாக்கரில் வைத்த நகைகளை வங்கியில் இருந்து நேற்று மதியம் அவர் எடுத்துச்சென்றார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், உமாவின் அருகில் சென்று தெரிந்தவர்கள்போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நகைகள் வைத்திருந்த பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உமா இதுகுறித்து கமுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே நகையை பறிகொடுத்த உமாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் உண்மையிலேயே நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றார்களா? அல்லது உமா நகை பறிபோனதாக நாடகமாடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JewelRobbery

×

X