என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Addiction"

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
    • மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் விற்பவர்கள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை மாணவர்களுக்கு வழங்கினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • போதிய விழிப்புணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தவிர்க்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.
    • இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் பல்கலைக்கழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுப்பதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களி டையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நண்பர்கள் மூலமும், சூழ்நிலையின் காரணமாகவும் போதை பழக்கம் உருவாகிறது.

    சரியான விழிப்பு ணர்வு இருந்தால் போதைக்கு அடிமையாகாமல் தவிர்க்கலாம். போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல. மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், இழப்புகள் குறித்து மதுக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் பாலக்குமார், கோவிந்தராஜ், ஆசிரியர் தேவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
    • பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.

    பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
    • போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி ராஜாகுலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி பாண்டீஸ்வரி (33). ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த கடப்பாரையால் கணவனை தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாண்டீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போதை பழக்கங்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் விபத்துக ளால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு தவிர்ப்பது, விபத்து அவசர காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை கலெக்டர் முன்னிலையில் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் அருண் தம்பு ராஜ், போதை பழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மீண்டு வர ஆசிரியர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்கள் செல்போன் பயன் பாட்டை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

    • கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை.
    • கவியரசன் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான்.

    குத்தாலம்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் சிலரும் அடிமையாகும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி வருவது வேதனையளிக்கிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே கஞ்சா அடிக்கும் சம்பவம்சமூக ஆர்வலர்களை பெரும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக சமீப காலமாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவன் ஒருவரின் தந்தை பேசுவது போன்ற வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியாகி சக பெற்றோரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் என் மகனை, சக மாணவர்கள் கஞ்சா சாப்பிட்டு விட்டு தாக்கியுள்ளனர். இந்த பள்ளியில் படிக்கிற 6-ம் வகுப்பு மாணவன் கூட கஞ்சா அடிக்கிறான். 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. பள்ளிக்கு வெளியே ஒதுக்கபுறமான ஒரு இடத்தில் இந்த செயல்கள் அரங்கேறி வருகிறது என்று மாணவனின் தந்தை பேசுவது போலவும், அதற்கு தலைமை ஆசிரியர், போலீசில் பல தடவை புகார் கூறினோம். அவர்கள் 3 முறை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் சென்று கஞ்சா குடிப்பவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று பதில் அளிப்பதாக அந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

    இந்த வீடியோ மூலம் அந்த பள்ளியில் மாணவர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கஞ்சாவை பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தடுக்க அதிரடி சோதனை பணியில் ஈடுபட வேண்டும். அப்படி வெளிமாவட்டங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருபவர்கள் மீது கடும் நடடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை கடந்த பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆகியோர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    கடலூர்:

    புவனகிரியில் சிதம்பரம் விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதில் புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ், பள்ளி தலைமை ஆசிரியர்ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • செந்தில்நாதன் என்பவர் நேற்றிரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை உடைத்து தகராறு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 24).

    இவர் நேற்று இரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த நகர அரசு பஸ்சை நிறுத்தி வைக்குமாறு கூறினார்.

    இதனை அடுத்து பஸ்சை ஒட்டி வந்த பெரம்பூர் தியாகராஜன் (59) பஸ்சை சிறிது நேரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ் எடுக்க முயன்ற போது செந்தில்நாதன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரசு பஸ் முகப்பு விளக்கு உடைத்து டிரைவர் தியாகராஜனை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த தியாகராஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை செந்தில்நாதன் உடைத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலின் பெயரில் சீர்காழியின் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
    • புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் புனிதன் (வயது35).

    கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

    புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார்.

    அப்போது திடீரென ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

    அப்போது அவரின் நண்பர்களான மது போதையில் இருந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து புனிதனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் புனிதனின் நண்பர்களான துரை மகன் தர்மேந்திரன் (27), பாண்டியன் மகன் ரஞ்சித் (25) மற்றும் பிரசாத் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புனிதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×