search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi festival procession"

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.
    • நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்துருளி வீதி உலா வந்தார். கடந்த 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையடுத்து சுவாமி திருமண கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் குழும தலைவர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளான தேரோடும் வீதி, அண்ணாநகர், சந்தை திடல், வடக்கு தெரு, நடுத்தெரு வழியாக தேரில் சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளி வீதி உலா வந்துமீண்டும் சன்னதியை வந்தடைந்தது.

    இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், தாடிக்கொம்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கசாமி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், தொழில் அதிபர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மாள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்தனர். ஆடித் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×