search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK administrator"

    • வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை

    கரூர்:

    கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.

    இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

    அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு சமையல் தொழிலாளி கொலையில் தலைமறைவான அ.தி.மு.க. நிர்வாகியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி. கடந்த 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

     இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிங்கி குளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா(34), ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

    அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சி.ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகத்தினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்பத்திரிக்குள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டுகளுக்காக குரைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக நுழைவு வாயிலிலேயே நிறுத்திவைக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×