என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ADMK protesting"
- இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
கோபி:
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
இதில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட குடும்ப த்தலைவிக்கானரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டி த்தும் கோஷம் எழுப்ப ப்பட்டது.
தாலிக்கு தங்கம், பெ ண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், அரசு ஊழியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்தும் இதில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ, கோபி நகர அ.தி.மு.க. செய லாளர் பிரினியோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் பறக்க விடப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.