search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admk Win"

    • அரசு விழாக்களில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்கக்கூடாது என தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது
    • நிதி வருவாயை உயர்த்துவதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பினை தி.மு.க. அரசு செய்யவில்லை

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    அரசு விழாக்களில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பி னர்களை அழைக்கக்கூடாது என தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. சட்டமன்றத்தில் இது குறித்து பிரச்சனை எழுப்பப்படும்.

    மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்புணர்ச்சி இருக்க கூடாது.இந்த ஆட்சி தவறான முன் உதாரணமாக இருந்து வருகிறது.எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி தான் முதன்மையானது என்று கூறுவார்கள்.உண்மையிலே எதிர்க்கட்சி என்றால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அ.தி.மு.க. தான். ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் நம்பர் ஒன் அ.தி.மு.க. தான். வரும் பாராளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து நின்றால் நாங்களும் தனியாக நிற்க தயார்.

    ஏற்கனவே அ.தி.மு.க. தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை பெற்றுள்ளது.

    நாங்கள் மக்கள் பிரச்சினைகளை சட்டமன்ற கூட்டத் தொடரில் எடுத்து ரைப்போம். அப்போது யார் எதிர் கட்சி என்பது தெரி யும். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. நிதி வருவாயை உயர்த்து வதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பினை தி.மு.க. அரசு செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியை கூட முழுமையாக தர முடியாமல் பாதி பாதியாக தரக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.

    அ.தி.மு.க.வில் எவ்வித பிரிவும் இல்லை. ஒரு சிலர் பிரிந்து சென்றுள்ளனர். இது காலங்காலமாக நடப்பது தான். அ.தி.மு.க.வில் பிளவு கிடையாது.பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களில் வெற்றி பெறும். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பிரச்சினை தொடர்பாக சபாநாயகர் எடுக்கும் முடிவை தொடர்ந்து அ.தி.மு.க. நடவடிக்கை இருக்கும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×