search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advance treatment"

    • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது
    • அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 20 படுக்கையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனைத்து உயர்தர சிகிச்சைகள், அனைத்து மருத்துவ வசதிகளுடன் 20 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளுடன் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பில் உயர்சிகிச்சை அரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் தலைமை தாங்கினர். இணை இயக்குனர் கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி உயர்சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள வார்டில் மாரடைப்பு , அனைத்து விஷமுறிவு, பாம்புகடி மற்றும் மூளை காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க கூடிய வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் தானியங்கி முறையில் இயங்க கூடியது. மேலும் நோயாளிகளே தாங்களாகவும் இயக்கும் முறையில் எளிதாக உள்ளது.

    நிகழ்ச்சியில் மூத்த மருத்துவர் விஜயகுமார், செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, முத்துலட்சுமி, ராஜாத்தி ஜெகதா, வசந்தி, செவிலியர் சுதா மற்றும் அனைத்துதுறை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×