என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AFSPA"
- ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
- ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் சட்டம், இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குலிஸ்தான செய்தி நிறுவனத்த்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை திரும்பப்பெற நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் சட்டம்-ஒழுங்கை அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். என்கவுண்டரின்போது ஜம்மு-காஷ்மீர் போலீசாரை முன்னிறுத்தி அவர்களை வலுப்படுத்தி வருகிறோம். மெதுமெதுவாக துருப்புகளை திரும்ப பெறப்படும். இதற்கான திட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் ப்ளூ பிரின்ட் உருவாக்கியுள்ளோம்.
ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரம் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து நிச்சயமாக பரிசீலனை செய்வோம். அங்குள்ள சூழ்நிலை சஜக நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த பரிந்துரையை விரைவாக பரிசீலனை செய்வோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் "பிடிபி கட்சி படிப்படியாக துருப்புகளை திரும்ப பெற வேண்டும். அதேவேளையில் ஆயுதப்படை சிறப்பு பிரிவு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இது முக்கியத்துவம் பெறப்பட்டிருந்தது. தற்போது பா.ஜனதா முழு மனதோடு இதை ஏற்றுக்கொண்டுள்ளது" என்றார்.
பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.
போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது
இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
சமீபகாலமாக இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு துணை புரிவதற்காக வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாகலாந்து மாநிலத்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NagalandAFSPA #AFSPA
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்