search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after being bitten by"

    • சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.

    இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 பேரை அந்த தெருநாய் கடித்தது.
    • இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த தெருநாய்யை அடித்து கொன்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). விவசாயி. இவர் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மின்சாதன விற்பனைகடையில் பொருட்களை வாங்க தனது மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார்.

    அந்த மின்சாதன விற்பனைக்கடைக்கு சொந்தமான குடோன் ஒன்று சாலைப்புதூரை ஒட்டி அமைந்துள்ளது. அந்த குடோனில் பொருட்களை பார்வை யிட்ட பின்னர் குடோனிலிருந்து வெளியே வந்த விவசாயி சுப்பிரமணி குடோனுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவரை நோக்கி வந்த தெருநாய் ஒன்று சுப்பிரமணியை கடித்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியான விவசாயி சுப்பிரமணி உடனே தனது மோட்டார் சைக்கிளை கீழேபோட்டு விட்டு அந்த நாயை விரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த நாய் அங்கிருந்து சாலைப்புதூர் ரோட்டிற்கு ஓடிச்சென்றுள்ளது.

    செல்லும் வழியில் சாலையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துள்ளது. அப்போது அந்த வழியில் சென்றுகொண்டிருந்த கரூர் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரையும் கடித்துள்ளது.

    முதலில் சாலைப்புதூர் வருந்தியாபாளையம் பிரிவில் துவங்கிய இந்த நாயின் வெறியாட்டம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சி பணியாளர்கள் தங்களது பேரூராட்சியின் வரம்பிற்குள் உள்ள தழுவம்பாளையத்தை நோக்கி நாய் சென்றுகொண்டிருப்தை அறிந்து உஷாராகி மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல ஒலிபெருக்கியுடன் சென்றுள்ளனர்.

    இந்த இடைபட்ட நேரத்துக்குள் தழுவம்பாளையத்திற்குள் ஆறுபேரை நாய் பதம்பார்த்துவிட்டு கொடுமுடியை நோக்கி விரைந்துள்ளது.

    இதற்கிடையே நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு வந்து முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

    அவர்கள் சென்று கொண்டிருந்தபோதே அடுத்தடுத்து கொடுமுடி அரசு மருத்துவனைக்கு நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியான கொடுமுடி அரசு மருத்துவமனை பணியாளர்கள் தங்களது பணியை தொடர்ந்து கொண்டிருந்தபோது இரவு 7 மணிக்கு கொடுமுடிக்குள் உள்ள கோகுலம் நகருக்குள் புகுந்த அந்த நாய்.

    அங்கு கொடுமுடியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை சாந்தியை கடித்துவிட்டு அந்த நகரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவனையும் கடித்துள்ளது. இவ்வாறு 12 பேரை அந்த தெருநாய் கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த தெருநாய்யை அடித்து கொன்றனர்.

    நாய் கடித்து காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    கொடுமுடி அரசு மருத்துவமனையில் நாய்கடிக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மற்றும் துணைத்தலைவர் ஹசன் ஆகியோர் நேற்று இரவுநேரில்சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

    நாயின் வெறியாட்டம் குறித்து கேள்விபட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி சம்பவம் குறித்து கொடுமுடி பேரூராட்சி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார்.

    அப்போது தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

    ×