search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against 3 people who"

    • கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    பிடிப்பட்டவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடியில் ஒரு வீட்டின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் கோகுல் (25) என்பதும் வீட்டு அருகே சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் தாளவாடி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி அண்ணா நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாது (19) என்று தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் என்கிற ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ×