search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggrieved farmers"

    • விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி வேளாண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    • இதனால் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு பூங்கா சாலையில் இயங்கி வரும் மஞ்சள் மண்டியில் கோபி, ஈரோடு, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் பல ஆண்டுகளாக தங்களது மஞ்சள் மூட்டை களை இருப்பு வைத்து ள்ளனர். ஆண்டுக்கணக்கில் மஞ்சள் இருப்பு வைக்கும் விவசாயிகள் விலை உயரும் போது அவற்றை விற்பனை செய்வது வழக்கம்.

    இதன்படி மஞ்சள் மூட்டைகளை இருப்பு வைத்திருந்த 11 விவசாயிகள் மூட்டைகளை எடுப்பதற்காக சென்று பார்த்த போது 1,300 மஞ்சள் மூட்டைகளுக்கு பதில் தேங்காய் மட்டைகள் நிரப்பிய மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரில் கிடங்கு காவலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் தொடர்புடைய கிடங்கு உரிமையாளரை கைது செய்து மஞ்சள் மூட்டைகளு க்கான தொகை யை விவசாயி களுக்கு வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஈரோடு கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற வேளா ண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மஞ்சள் மூட்டை களுக்கான தொகை யை கேட்டால் கிடங்கு உரிமை யாளர் மிரட்டுவதா கவும், அவரது கிடங்குக்கு சீல் வைப்ப துடன், சொத்து க்க ளை முடக்கி பணத்தை மீட்டு த்த ருமாறு வலியுறுத்தினர்.

    மஞ்சள் மூட்டைகளை திருடி விட்டு தேங்காய் மட்டை களை மூட்டைகளாக அடுக்கி தீ வைத்து அதனை விபத்து போல் ஜோடிக்க அவர்கள் திட்டமிட்டி ருந்ததாக விவசா யிகள் குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனால் இன்று வேளா ண்மை குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×