என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agnipat"
- இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
- வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம்:
இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த திருப்பூர் மண்டலத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த ஆர்வம் உள்ள இளைஞர்கள் https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதிக்கு பிறகு அனுமதி கடிதம் வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் ராணுவ பொதுப்பணிகள், தொழில் நுட்பப் பணிகள், ட்ரேட்ஸ்மேன், எழுத்தர், பணிமனை காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறுகிறது.
இப்பணியில் சேர வயது, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.