search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural company"

    • சம்பவத்தன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் உள்ளது தோப்புகாடு. இங்கு சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையத்தினை சேர்ந்த பழனிசாமி என்பவர் உதயமலர் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

    100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உறுப்பினராக கொண்டு பழனிசாமி தலைவராகவும், வெள்ளோடு கனகபுரத்தினை சேர்ந்த வினோத் குமார் என்பவர் செயலாளராக இருந்து நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வழக்கம் போல் வினோத்குமார் அலுவலக வேலை முடிந்து அலுவலகத்தினை பூட்டு விட்டு சென்று விட்டார். சம்பவத்தன்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.

    இது குறித்து தலைவர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சென்னிமலை டவுன் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு நடந்த அடுத்த நாளே மீண்டும் பூட்டை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் சென்னிமலை பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    ×