search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agriculture Additional Chief Secretary"

    • செங்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
    • கலங்காதகண்டி கால்புறவில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.

    உலக வங்கி நிதி உதவியுடன் நீர்வளம் மற்றும் நிலவளம் என்ற திட்டத்தின் கீழ் சிற்றாறு உப வடிநில பகுதியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகள் நெல் சாகுபடியில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை கடந்த காலங்களில் செய்ததன் தொடர்பாக தற்போதும் அந்த தொழில் உத்திகளை கடைப்பிடித்து வருகின்றனர்.

    அப்பணினை ஆய்வு செய்வதற்காக தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், நீர் வளம் மற்றும் நிலவள

    செங்கோட்டை வட்டாரம் கலங்காதகண்டி கால்புறவில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்கு வருகை தந்த திட்ட இயக்குனரை, வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் வரவேற்று, நீர் வளம் நிலவளத் திட்டத்தின் தாக்கமாகவும், திருந்திய நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை அறிமுகம் செய்து வயல்வெளியில் தொழில்நுட்பங்களின் சிறப்பை விளக்கி கூறினார்.

    விவசாய சங்க தலைவர் சுப்பையா திட்ட இயக்குனரிடம் கூறும் பொழுது, அரசு மானியம் வழங்கி எங்களை ஊக்கப்படுத்தியதன் விளை வாக தற்போது நாங்கள் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை தொடர்ந்து பின்பற்றி அத்தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் காரணமாக, விவசாயச் செலவுகள் மிகவும் குறைகிறது. உற்பத்தி அதிகரிப்பதுடன் வருமானம் கூடுகிறது என்று கூறினார்.

    முன்னோடி விவசாயி அக்பர் தன்னுடைய வயலில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்ததன் நன்மை பற்றி விளக்கிக்கூறியதோடு, உருளும் களைக் கருவி கொண்டு களை எடுத்தலை செயல் விளக்கமாக செய்து காட்டினார்.

    இலத்தூர் பெரியகுளம் விவசாய சங்க தலைவர் முருகையா தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டாரத்தில் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கால்வாய்கள், குளங்கள் சீரமைப்பு மற்றும் விவசாய வயல்வெளிக்கு செல்லும் பாதைகளை சீரமைத்து தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திட்ட இயக்குனரிடம் விவசாயிகள் முன் வைத்தனர். திட்ட இயக்குனர் விவசாயிகளிடம் பேசும் போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களைக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை உரிய ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தா தேவி, நீர்வள நிலவளத் திட்டத்தின் சிறப்பு அதிகாரி கிருஷ்ணன், செயற்பொறியாளர் முருகன் சிவகுமார், மீன்வளத் துறையின் உதவி மீன்வள இயக்குனர் பாலசிங், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×