search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIADMK general committee"

    • உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என ஈபிஎஸ் மனு

    அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அ

    திமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல்.

    சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாளை இந்த வழக்கு விசாரணை வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

    ×