என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ainthu veetu swami temple
நீங்கள் தேடியது "Ainthu Veetu Swami Temple"
- பனைமரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.
- இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று காலையில் காய்ந்த முழு பனை மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து கோவில்முன்பு நடவு செய்தனர்.
அதன் பின் பனை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, உச்சி வரை காய்ந்த பனை ஓலைகளை சுற்றி வைத்து சொக்கப்பனை அமைக்கப்பட்டது.
இதன் உயரம் 50 அடி ஆகும். இரவு 9 மணி அளவில் திருக்கார்திகை சிறப்பு பூஜையுடன் சுவாமிகளுக்கு படையல் செய்து வழிபாடு செய்து பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.
இதற்கானஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயந்தி, அறங்காவலர்கள் குழு தலைவர் மகேஸ்வரன் அறங்காவலர்கள் ஜெகநாதன், சுமத்திர பிரகாஷ், சுந்தரராஜ், கஸ்தூரி மற்றும் ஆலய ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
×

X