என் மலர்
நீங்கள் தேடியது "airport"
- ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
- கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில் ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.
விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.
சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
- தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.
இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருச்சி விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் பயணச்சீட்டை சோதனை செய்கிறார்கள்.
- இரண்டாவது முறையாக பயணிகளின் உடமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.
திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு விமானத்தில் செல்லும் பயணிகளின் வாகனங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்படுகிறது.
வாகனங்கள் மட்டுமின்றி பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதற்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் பயணச்சீட்டை சோதனை செய்கிறார்கள். இரண்டாவது முறையாக பயணிகளின் உடமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு சோதனை செய்யப்பட்ட பிறகே முனையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது கட்டமாக பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணி நிறைவு பெற்ற பின்பு பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையானது தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
இதனால் பயணிகள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக வந்தால் பரிசோதனைகள் நிறைவு பெற்று விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முழு சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேலும் அனுமதிச்சீட்டு இல்லாமல் உள்ளே வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பானது தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை.
- கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு இருந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து செல்ல முறையாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
- திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஒரு புதிய விமான சேவை தொடங்குகிறது.
- வளைகுடா நாடுகளுக்கு செல்லூம் பயணிகளுக்காக
திருச்சி:
திருச்சி விமான நிலைய த்திலிருந்து மலேசியா சிங்கப்பூர் துபாய் மஸ்கட் ஓமன் அபுதாபி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்றுவருவது வாடிக்கை இவர்கள் போதுமான விமான சேவை இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றனர் இதனால் இலங்கையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமான சேவையானது போதுமான இருக்க இல்லாத காரணத்தினால் பொதுமக்கள், பயணிகள் பெரும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான புதிய சேவையை இயக்குவதற்காக பிட்ஸ் ஏர் எனும் நிறுவனம் குளிர்கால அட்டவணையில் நேரம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்திருந்தது இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்குவதற்காக நேரம் ஒதுக்கீடு செய்து விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் பிட்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் டிசம்பர் 8ம் தேதி முதல் வியாழன் சனி ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் விமான சேவைகளை இயக்க உள்ளது வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 11 .25 மணிக்கு வந்து சேரும் மீண்டும் திருச்சியில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1.25 மணிக்கு கொழும்பு விமானத்தை சென்றடையும் எனவும் சனிக்கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1.45 மணிக்கு திருச்சி விமானநிலையத்தை வந்தடையும் எனவும் மீண்டும் திருச்சியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு 3.45 மணிக்கு இலங்கை சென்றடையும்.
எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கு திருச்சி விமான நிலை யத்தை வந்தடையும் எனவும் மீண்டும் 11.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு இலங்கை சென்று அடையும் என அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ்- ெரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
ெரயில் நிலையத்தில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கிறார்கள். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்பவும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தண்டவாளங்கள், ெரயில் பெட்டிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம், 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
- மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார்.
கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார்.
அன்று கோவாவிற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, இதைத்தவிர பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:-
வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம், 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை ஆளும்.
தற்போதுள்ள டபோலிம் விமான நிலையம் ஒரு வருடத்தில் 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆனால் புதிய விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கான வசதி இல்லை.
பிரதமர் மோடி டிசம்பர் 11ம் தேதி கோவா வந்து மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை தொடங்கி வைக்கிறார்.
மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார். வடக்கு கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத் (உத்தர பிரதேசம்) தேசிய யுனானி மருத்துவக் கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
- கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-
நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.
இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.
நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.
கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.
எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
- மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
- டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.
அவனியாபுரம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
- விமான நிலையத்தில் இருந்த பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது.
- மாதந்தோறும் சராசரியாக 3 அல்லது 4 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இன்று காலை 7 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் பயணித்தனர்.
விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவை நோக்கி புறப்பட்டது.
விமானம் வானத்தில் பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விமானத்தின் இடது எஞ்சினில் 2 கழுகுகள் மோதியது.
இதையறிந்த விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்து விமானத்தை அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்த போது இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது.
அதனை அப்புறப்படுத்திய பொறியாளர்கள் மாற்று எஞ்சினை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பறவை மோதியவுடன் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் தான் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
மாதந்தோறும் சராசரியாக 3 அல்லது 4 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
- பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் புகை மூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
- அதிகாலை நேரத்தில் பனியுடன் புகையும் சேர்வதால் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம் ஆனது.
ஆலந்தூர்:
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான வருகிற 14-ந்தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் புகை மூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
அதிகாலை நேரத்தில் பனியுடன் புகையும் சேர்வதால் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம் ஆனது.
இதையடுத்து போகிப் பண்டிகையை புகையில்லாமல் கொண்ட வேண்டும் என்றும் சென்னை விமான நிலையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
புகை மூட்டம் இல்லாத போகியைக் கொண்டாடுங்கள். ஏனெனில் அடர் மூடு பனியில் கரும்புகை கலந்தால், அந்த காற்று மாசு விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்வை நிலையை வெகுவாகக் குறைத்து, விமான செயல்பாடுகளை பாதிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விமான நிறுவனங்களில் ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
புதுடெல்லி :
உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும் இது.
நேற்று வெளியான இதன் பட்டியல்படி, உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ', 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.