என் மலர்
நீங்கள் தேடியது "AITUC"
- ஏ.ஐ.டி.யு.சி. 20-வது மாநில மாநாடு நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கியது. இதனை தொழிற்சங்க மாநில தலைவர் சுப்புராயன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து 3 நாட்கள் மாநாட்டில் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
நெல்லை:
ஏ.ஐ.டி.யு.சி. 20-வது மாநில மாநாடு நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கியது. இதனை தொழிற்சங்க மாநில தலைவர் சுப்புராயன் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கேரள மாநிலம் ஆலப்புலாவில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேசிய அளவிலான ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாடு நடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.
தொழிலாளர்களுக்காக 44 சட்டங்கள் இருந்த நிலை யில் அதனை 4 சட்டங்களாக குறைத்துள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., தேசிய செயலாளர் நிஜாம், விவசாய தொழில் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, கட்டிட தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ரவி, துணை பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், நிர்வாகிகள் அருணாச்சலம், நடராஜன், தொ.மு.ச. சண்முகம், ஹெச்.எம்.எஸ்.ராஜா ஸ்ரீதர், ஐ.என்.டி.யு.சி. சேவியர், ஏ.ஐ.டி.யு.சி. அனவரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 3 நாட்கள் மாநாட்டில் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
- மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ரூ.21 ஆயிரம் மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. கவுன்சில் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். 3 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் என்.டி.சி ஆலைகளை உடனே திறக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் குறையாத மாத ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
- தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் சமூக பதட்டத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, ஏஐடியூசி. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
வலைதளங்களில் தமிழா்களை வடமாநிலத் தொழிலாளா்கள் விரட்டிவிரட்டித் தாக்குகிறாா்கள் என்ற செய்தி திட்டமிட்டு பரப்பபட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதுடன், திருப்பூரின் தொழிலும், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது.
திருப்பூா் மாநகரில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தொழிலாளா்களை முறைப்படுத்தும் வகையிலும், அனைத்து தொழிலாளா்களின் முழு விவரங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். திருப்பூரில் சமூக பதட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷம் எழுப்பப்பட்டது.
சிவகிரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர் தென்காசி மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கிதுரை, சிவகிரி கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ராஜேந்திரன், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றை மானிய விலையில் வழங்கிட வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிககைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
- நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி. யூ. சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லட்சுமணன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர் ரங்கன், மாநில குழு உறுப்பினர் முருகன், செயலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் உலகநாதன், சேதுராமலிங்கம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
- கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தல்.
தஞ்சாவூர்:
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தஞ்சாவூர் அரசு போக்குவரத்து நகர்1 கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ மத்திய சங்கப் பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஐ.என்டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
- துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா்.
- பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
திருப்பூர்:
ஏ.ஐ.டி.யூ.சி. பனியன் பேக்டரி லேபா் யூனியன் 41-வது மகாசபைக் கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் எஸ்.செல்வராஜ் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். ஏஐடியூசி. மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்ட பொருளாளா் பி.ஆா். நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-
திருப்பூா் மாவட்டம் முழுவதும் பனியன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு முறையாக போனஸ் வழங்கப்படுகிறதா என்பதை, தொழிற்சாலை ஆய்வாளா்களும், மாவட்ட நிா்வாகமும் கவனிக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தை இணையத்தில் அணுகலாம். நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை குறிப்பிட்ட காலம் வரை உயராமல் பாா்த்துக்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் சுத்தமான குடிநீா், உணவு அருந்துமிடம், ஓய்வறை, மருத்துவ முதலுதவி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாா் பெட்டி உள்ளிட்ட சட்டப்படியான வசதிகள் எதுவும் அமலில் இல்லை. தொழிற்சாலை ஆய்வாளா்கள், தொழிலாளா் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மதுரையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது,.
மதுரை
மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பனகல் சாலை திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 'மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தமிழகத்தில் அனைத்து தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தை சீராக செயல்படுத்த வேண்டும், மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆட்டோ தொழிலை பாதிக்கும் வாகன சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொது செயலாளர் நந்தாசிங் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பவானி நகராட்சி முன்பு ஏ.ஐ.டி.யு.சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி:
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் கே.பி.நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உள்ளாட்சி தொழிலாளர்கள் குறைதீர் ஆணையம் அமைத்திட வேண்டும் எனவும், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் அவுட்சோர்சிங், தினக்கூலி போன்ற முறைகளை ரத்து செய்து பணியமர்த்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகராட்சி சங்க தலைவர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பாலமுருகன், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.