search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Al Nassr"

    • காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
    • பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.

    ரியாத்:

    கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .

    பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

    • 44-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.
    • அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    ரியாத்:

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.

    ஆனால் அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக அல் - ஹிலால் அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முடிவில் அல் - ஹிலால் 4-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் - நாசர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

    அல் - ஹிலால் தரப்பில் அலெக்சாண்டர் மித்ரோவிக் 2 கோல்களும், செர்ஜி மிலின்கோவிக் மற்றும் மால்கம் தலா 1 கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

    • அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018-ம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.

    ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டாலர்களை செலுத்த அல் நஸர் தவறிவிட்டது.

    இதையடுத்து, 2021-ம் ஆண்டில் பணத்தைச் செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என பிபா எச்சரித்தது.

    இந்நிலையில், எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
    • இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது.

    லிஸ்பன்:

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ அந்த கிளப் அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பல கிளப் அணிகள் போட்டியிட்டன.

    இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியில் ரொனால்டோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த கிளப் அணியான அல்-நசர் அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார்.

    இந்த ஒப்பந்தத்தின் படி அவர் ஆண்டுக்கு 200 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1770 கோடி) பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அல்-நசர் அணியுடன் ரொனால்டோ, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அல்-நசர் அணியின் டி-சர்ட் ரொனால்டோவிடம் வழங்கப்பட்டது. அவரது பெயர் பொறித்த டி-சர்ட்டை அறிமுகப்படுத்தினார்.

    புதிய அணியில் இணைந்தது குறித்து ரொனால்டோ கூறியதாவது:-

    ஐரோப்பிய கால்பந்தில் நான் பெற்ற வெற்றியால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஆசியாவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன்.

    எனது புதிய அணியின் வீரர்களுடன் இணைவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து வெற்றியை அடைய உதவுவேன் என்றார். அல்-நசர் கிளப் அணி டுவிட்டரில் கூறும் போது, வரலாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக், தேசம், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் ஒரு கையொப்பமாகும். ரொனால்டோவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

    37 வயதில் ரொனால்டோ விளையாட உள்ள 6-வது அணி அல்-நசர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×