search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alanganallur"

    உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்காக 850 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். #Jallikattu #AlanganallurJallikattu
    அலங்காநல்லூர்:

    ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்குவதற்கு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது.

    இதில் மாட்டின் உரிமையாளர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை முறையாக ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 1400 பேர் பங்கேற்று இந்த அடையாள அட்டையினை வாங்கிச் சென்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த வருடம் தகுந்த இடங்களாக தேர்வு செய்து மாடுபிடி வீரர்களையும், காளைகளையும் பதிவு செய்துள்ளனர். இது அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதுபோல் வருங்காலங்களிலும் இந்த நடைமுறையே கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வர்ணம் பூசும் பணி நடந்தது. இதுதவிர பார்வையாளர்கள் அமரும் இரும்பு கம்பிகளால் ஆன மேடைகள், பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இதுதவிர மாடுகள் வெளியேறி செல்லும் மைதானப் பகுதிகளில் இரண்டு அடுக்கு மரத் தடுப்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ளது. காளைகள் நிறுத்தும் இடம், வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள், தயார் நிலைக்கு வந்துள்ளது.

    பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Jallikattu #AlanganallurJallikattu
    அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

    அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

    பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

    அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளம்பெண் கடத்தியதாக வாலிபர் உள்பட 6 பேர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஷாலினி (வயது 18).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து முருகேசன், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சாக்ரடீஸ் மகன் சச்சின் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு உடந்தையாக அவரது தாயார் சாரதா, உறவினர்கள் பிச்சை, முத்துப்பிள்ளை, பாசப்பிரியன், சசி ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    அலங்காநல்லூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி தனியார் வாகன விற்பனை மையத்தில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 5½ கிலோ கஞ்சா, ரூ.400 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை பூந்தமல்லி நகரை சேர்ந்த கர்ணன் (வயது 55), தத்தனேரி பாக்கியநாதபுரத்தை சேர்ந்த இன்பராஜா (35), அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரியை சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    ×