search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alas"

    • மரத்தடியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், மண்ட பம், திருவாடானை, கமுதி, ராமேசுவரம் உள்பட பல்வேறு தாலுகாவில் உள்ள 25-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளி கள் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகி றார்கள். ஆனால் பள்ளி களில் 100-க்கும் அதிகமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.

    இங்குள்ள மாணவர்கள் வகுப்பறை வசதி இல்லா ததால் வெயில், மழையில் மரத்தடியிலும், பள்ளிகளின் வராண்டாக்களிலும் அமர்ந்து பாடம் படிக்கும் பரிதாப நிலை உள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், வகுப்பறைகள் இல்லாத மேல்நிலைபள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரவு கிடைத்ததும் கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் கட்டும் பணி தொடங்கப்படும் என்றார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×