என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol Addiction"

    • அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
    • பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

    ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
    • கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது‌. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாண்டித்துரையும்,கருப்பசாமியும் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.
    • ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர் பூல்சாமி என்ற கொம்பையா.

    மதுபோதை தகராறு

    இவருடைய மகன்கள் பாண்டித்துரை (வயது 29), கருப்பசாமி (26). இவர்கள் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.

    இவர்கள் 2 பேரும் நேற்று இரவில் தங்களது லோடு ஆட்டோவில் கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு- ஊத்துப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றனர்.

    தம்பி அடித்து கொலை

    அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாரில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை, இரும்பு கம்பியால் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னர் பாண்டித்துரை அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாண்டித்துரையை தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி அருகே பதுங்கி இருந்த பாண்டித்துரையை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பாதுகாப்பு போலீசார் அவரை வெளியேற்றினர்
    • மது போதையில் மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மது போதையில் ஒருவர் தனது தெரிந்த நபருடன் மனு கொடுக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கையில் வைத்திருந்த மனுவில், ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையின் போது அன்னதானம் வழங்கவும், பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று மல்லுக்கட்டி அந்த போதை நபரை பிடித்து கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.




    • ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). கூலி தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சிவராஜ் உட்பட 4 பேர் பொட்டகுளம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிவகுமாருக்கும், மணிவண்ணன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் மணிவண்ணன், சிவராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    • தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    • மது போதையில் அவர் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார்.

    தஞ்சாவூர்:தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். 

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தோப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 34) தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று மது அருந்தினார்.

    பின்னர் தள்ளாடியபடியே வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்து ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கோபிநாத் இறந்தார்.

    இதற்கிடையே கோபிநாத்தை காணாதது கண்டு குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது பள்ளத்தில் கோபிநாத் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர்.
    • சித்திரைகுமார் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் திரவியநகர் கிராமத்தில் உள்ள சம்பன்குளத்தில் இறந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் சடலம் மிதப்பதாக பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர். பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சின்னபள்ளிவாசல் தெருவை சேர்ந்த சித்திரைகுமார் (வயது 48) என்பதும், அவர் திரவியநகர் பகுதியில் தங்கியிருந்து கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என்றும், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவந்தது. மது போதையில் தான் அவர் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • மது போதையில் இருந்த ராணுவ வீரரிடம் நகை திருடிய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி (வயது28). இவர் மேகலாயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் மடவிளாகத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது தன்னியாபுரம் பகுதியை சேர்ந்த மணிஅச்சன் (43) என்பவரும் மது குடித்துள்ளார்.

    அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே ரமேஷ் பாண்டி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவரது மாமனார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ் பாண்டியை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். ரமேஷ் பாண்டி போதை தெளிந்த தும் அவர் அணிந்திருந்த 1 ½ பவுன் கை செயின், 1 பவுன் மோதிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தனது நண்பர் மணிஅச்சன் நகையை திருடி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் நேற்று போலீசார் மணி அச்சனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் ரமேஷ் பாண்டியிடம் இருந்து கைசெயினை மட்டும் திருடியதாக கூறினார். இருந்த போதிலும் மோதிரத்தையும் அவர் தான் திருடியிருக்க வேண்டும் என்று ரமேஷ் பாண்டி கூறியதால் அவரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மணிஅச்சன் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சோ

    காரைக்கால் அருகே விழிதியூர் மதுபாரில், மது போதையில் லாரி டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது43). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் காரைக்கால் அருகே உள்ள விழிதியூரில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே சென்றபோது, அதே ஊர் தெற்குத்தெருவைச்சேர்ந்த சந்தோஷ்(24), முருகானந்தம்(23) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் தர்மராஜ் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதை தட்டிகேட்ட தர்மராஜை, 2 பேரும் ஆபசமாக திட்டி, அடித்து, உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார்.
    • வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.

    புதுடெல்லி:

    மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் அமித்பிரகாஷ்(வயது30). இவர் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு கோல்ப் கோர்ஸ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு பாரில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தார். உடனே மதுக்கடை உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு ரூ.2 ஆயிரம் போக மீத 18 ஆயிரம் ரூபாயை அவரிடம் திருப்பி கொடுத்தார்.

    பின்பு கூடுதல் மது வாங்கிகொண்டு வந்த அமித்பிரகாஷ் வெளியில் வந்ததும் தனது காரில் இருந்தபடி மது குடித்தார். சற்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் போதை அதிகமானது.

    இந்த வேளையில் அங்கு வந்த மர்ம நபர் அமித் பிரகாசிடம் வந்து நானும் சேர்ந்து மது குடிக்கலாமா என்றார்.

    உச்ச போதையில் இருந்த அமித்பிரகாஷ் சரி என தலை ஆட்டியதோடு மதுவை ஊற்றியும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் அமித்பிரகாசிடம் 'டேய் என்னுடைய காரில் இருந்து மது குடிக்கிறாயா...இறங்குடா' என்று கூறியுள்ளார்.

    அதிக போதையில் இருந்த அமித்பிரகாஷ் அது தனது கார் என்பதை மறந்து போதையில் மயங்கி இருந்தார். இந்த வேளையில் மர்ம நபர் கூறியதால் காரை விட்டு இறங்கிய அவர் வாடகை கார் பிடித்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.

    மறுநாள் அதிகாலையில் விழித்ததும் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. உச்ச போதையில் தனது காரை இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அந்த காரில் அமித்பிரகாசுக்கு சொந்தமான லேப் டாப், பர்சில் ரூ.18 ஆயிரம், மொபைல் போன் போன்றவையும் இருந்தன.

    காருடன் அவற்றை மர்ம நபர் ஓட்டி சென்றுவிட்டார். அதிக போதையில் காரையும் உடமைகளையும் பறிகொடுத்த அமித்பிரகாஷ் போதை தெளிந்த நிலையில் தான் வசமாக ஏமாந்து போனதை உணர்ந்த பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார்.

    அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    ×