search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all departments"

    • ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு திட்டப் பணிகள், ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் சட்டமன்ற பேரவை நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (பொது) ஜெகதீசன் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஆர்.டி.ஓ.க்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபி) உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×