என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "almsgiving"
- எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம்.
- மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும்.
ஒருவரிடத்தில் எதைக் கொடுத்தாலும் 'போதும்' என்று சொல்ல மாட்டார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் பணம் கொடுத்தால் 'இன்னும் கொஞ்சம் தரலாமே' என்பார்கள். ஆனால் சாப்பாடு போடுகிற பொழுது அளவிற்கு அதிகமான உணவை நாம் இலையில் அள்ளி வைத்து விட்டால் 'போதும்' என்று சொல்வார்கள். இந்த 'போதும்'' என்ற சொல்லே. அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தைக் கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்கிறோம்.
அத்தகைய அன்னதானத்தை, மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும். அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் பரிமாற வேண்டும். தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள், சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். ஆனால் அதை தங்கள் மேற்பார்வையில் முறையாகச் செய்ய வேண்டும்.
அன்னதானத்திற்கு பெயர் பெற்ற ஊர், வடலூர். அணையா அடுப்பு இங்கே உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் என்று அன்போடு அழைக்கப்படும் ராமலிங்கம் பிள்ளையால் தோற்றுவிக்கப்பட்ட சத்ய ஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில் மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே 1867-ல் ஏற்றப் பட்ட அடுப்பு, இன்று வரை அணையாமல் அன்னத்தை சமைத்துக் கொண்டே இருக்கிறது.
வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம். வருடம் ஒரு முறை விழாக்களை முன்னிட்டு அன்னம் வழங்கலாம். தமது பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.
'பசி' என்று வரும் இயலாதவர்களுக்கு, முகமலர்ச்சியோடு உணவளித்தாலே அது அன்னதானம் தான். பசித்தவருக்கு இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்யுங்கள். இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து எந்நாளும் உதவி செய்வான்.
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உணவை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். கொடுப்பதற்கு ஆளின்றி இருக்கும் இவ்வுலகில், உணவை கெடுப்பதற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதீர்கள்.
- அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
- 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டன
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கிரிவலப்பாதையில் 4 இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.
கிரிலப்பாதை கருணாநிதி சிலை அருகில், அருணாச லேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தூய்மை அருணை அலுவலகம், வேட்டவலம் சாலை மற்றும் காந்தி சிலை சந்திப்பு ஆகிய நான்கு இடங்களில் பக்தர்கள், பொதுமக்களுக்கு உணவு வழங்கு வதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
இதில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தொ.மு.ச.பேரவை செயலாளர் சௌந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ.ஆறுமுகம், விஜி (எ) விஜயராஜ், சர்தார், டிஎம் கதிரவன், நகர மன்ற துணைத்தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர் துரைவெங்கட், மாவட்ட அணி நிர்வாகிகள் முரளி, சுப்பிரமணி, கிரிக்கெட்ரவி, வேங்கிக்கால் பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.
- தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
- தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஒன் றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், ஒன்றிய இளை ஞரணி சந்தனகருப்பு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி தலைமையில் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், ஒன்றிய செய லாளர் கண்ணதாசன், ஒன்றிய தலைவர் திருப்பதி, கல்லணை மூக்கையா, பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பா ராயலு தலைமையில் செயற் குழு உறுப்பினர் ஜெயமணி, முன்னாள் வட்டார தலை வர் மலைக்கனி ஆகி யோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா கட்சி சார்ப்பில் மண்டல் தலை வர்கள் சுபாஷ், தங்கதுரை தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்த மூர்த்தி, முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்க ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
- அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்
திருநாகேஸ்வரம்:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில்:-
இன்றும், நாளையும் 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர், மாநகர செயலாளர் பாலகுரு, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், செபாஸ்டின் ராஜ், ரமேஷ், பெரியசாமி, ஆடுதுறை பாலு, சாமிநாதன், பகுதி செயலாளர் கணேஷன், சுப்புராமன், பழ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.
கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை ராதா-ருக்மணி சமேத கிருஷ்ணா ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலய பத்தாம் ஆண்டு சுதர்சன ஹோம கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது
முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
பின்பு கேரளாசெண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
- கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வழியாக வேளாங்கண்ணி சென்ற பக்தர்களுக்கு உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் காந்தி வீதி – ரெயில்வே நிலையம் சந்திப்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின் தலைமை தாங்கினார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை க்கண்ணன், தொகுதி பொருளாளர் சசிகுமார், தொண்டரணி ராஜேஷ், வீரய்யன், சேட்டு, கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது.
- இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை, ஜூன். 4-
க. உவரியில் புகழ்பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு உணவுகளை வழங்கி இந்த சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ராஜன், கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், எழில் ஜோசப், புளியடி குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜை நடைபெற்றது.
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரபாஷாணி புரம்- காடந்தகுடியில் செல்வவிநாயகர், பாலமு ருகன், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் (ேம) 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து, 31-ந்தேதி குழந்தைகளுக்கான அகல் விளக்கு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜையும் நடைபெற்றது.
இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் மஞ்சள் பொடி, குங்குமம், அருகம்புல், பச்சரிசி உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு வந்து அமர்ந்து விளக்கேற்றி பூைஜயில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனை அடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பூஜையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்று (2-ந்தேதி) மாவிளக்கு போடுதல், பால்குடம், பால் காவடிகள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் சிறப்பு அன்னதானமும், தொடர்ந்து, 3 மணிக்கு அம்மன் குளக்கரையில் இருந்து சடல் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதேபோல், நாளை (3-ந்தேதி) பாலமுருகன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு வானவேடிக்கை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடி கிராமக்கள் செய்து வருகின்றனர்.
- இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவில் பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்