search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance"

    • ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் கார் ஒன்று தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்ந்து சைரன் சத்தம் எழுப்பியபோதும் கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தடுத்தார்.

    ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஆம்புலன்சை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து போலீசார் ரத்து செய்தனர்.

    மேலும் அந்த நபருக்கு போக்குவரத்து ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.

    • தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார்.
    • அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர்.

    உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.

    இந்நிலையில் ஆம்புலன்சை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு டிரைவரும் உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட் - ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தற்போது அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த உதவியாளர் ரிஷஇப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்   ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இந்த விபத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் வந்த காரின் பின்புற கேமராவில் பதிவாகியுள்ளது.

    பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும் போது பக்கத்தில் இருந்த பைக் மீது கார் மோதிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரை முந்துவதற்காக ஆம்புலன்ஸ் வேகமாக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் வந்தவர் காயமடைந்தார்.

    இந்த விபத்து ஆம்புலன்ஸ்க்கு முன்னாள் வந்த காரின் பின்புற கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லை.

    இதனால் மலை கிராம மக்கள் வசதிக்காக ஆந்திர மாநில அரசு படுக்கை வசதியுடன் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியுள்ளது.

    பைக்குடன் பொருத்தப்பட்ட நோயாளி படுக்கும் வகையில் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் பிற அடிப்படை மருத்துவ வசதிகள் இதில் உள்ளன.

    மலைப்பகுதிகள் மற்றும் குறுகலான சாலைகள் கொண்ட பகுதிகளுக்கு பைக் ஆம்புலன்ஸ் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு பைக்கை ஓட்டி செல்லும் மருத்துவ உதவியாளர் முதலுதவி சிகிச்சை அளிப்பார்.

    பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வருவார். இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது பார்வதிபுரம் மானியம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜ் ஆகிய 3 மாவட்டங்களில் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது இந்த சேவை இருந்தது.

    • அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான்.
    • 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சிகிச்சைக்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்து சென்றார்.

    இந்நிலையில் அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. அதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார்.
    • அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.


    கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார். அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இது குறித்து செய்திகள் சமூக வளைதளங்களில வெளியானது.


    இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கே அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

    • உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மீண்டும் உயிர் பெற்றார்

    ஹரியானா-வை சேர்ந்த 80 வயதான முதியவர் தர்ஷன் சிங் பிரார். உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பள்ளத்தில் சிக்கியது. அதன் பின்னர் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தர்ஷன் சிங் பிராரின் கைகளில் அசைவு ஏற்பட்டது. அதனை கவனித்த குடும்பத்தினர், அருகில் உள்ள ராவல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் சிங் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தர்ஷன் சிங்-ன் பேரனான பல்வான் சின் கூறுகையில், "உடல் நலம் சரியில்லாத நிலையில் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்தார். பின்னர் இதய துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனைதொடர்ந்து "தாத்தா இப்போது உயிருடன் இருப்பது ஒரு அதிசயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

    இதுகுறித்து ராவல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது, "நோயாளி இறந்துவிட்டார் என சொல்ல முடியாது. அவரை எங்களிடம் கொண்டு வந்த போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்தது, இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தொழில்நுட்ப பிழை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 11.15 மணியளவில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மாணவர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற முயன்றார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்டு மாணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக்கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    • முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
    • குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் பயணிகளின் அவசர சிகிச்சைக்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் இலவச தனியார் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் ஆலோசனை, மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், மற்ற அனைத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முற்றிலும் இலவசமாக மருத்துவ வசதியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனை ஒன்றை இங்கு அமைக்க வேண்டும்.

    இதேபோல் ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் திறந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.

    • சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது
    • வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் பழைய காமராஜ் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சோபனா (54). இவரது சொந்த ஊர் விருத்தாசலம் ஆகும். கடந்த 1 ½ ஆண்டுகளாக சோபனா பாகூரில் வசித்து வந்தார்.

    இவரது சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாதந்தோறும் மருத்துவபரிசோதனைக்காக இன்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்ல வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

    அப்போது திடீரென சோபனாவுக்கு மயக்கம் வந்ததால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர்.

    உடனே இது குறித்து பாகூர் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராதால் பொதுமக்கள் மருத்துவ மனைக்கு சென்று பார்த்தனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் கடந்த 3 நாட்களாக பஞ்சராகி இருப்பதை கண்டனர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது குறித்து கரிக்கலாம் பாக்கம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சோபனாவை கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஷோபனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குறித்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

    ×