search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "American writer"

    20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக நியூயார்க் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். #PhilipRoth #RIP
    நியூயார்க்:

    அமெரிக்க இலக்கிய உலகில் தனக்கென நிலையான இடத்தை பெற்று இருந்தவர், பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் (வயது 85). 1959-ம் ஆண்டில் வெளிவந்த ‘குட்பை கொலம்பஸ்’ என்ற சிறுகதை தொகுப்பே, மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் எழுதிய பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’, அவரை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

    அதன் பின்னர் அவர் ஏராளமான சரித்திர நாவல்கள் எழுதினார். குறிப்பாக ‘அமெரிக்கன் பாஸ்டரல்’ என்ற நாவல் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. அத்துடன் புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது.

    20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடைசியில் இதய செயலிழப்பு காரணமாக, நியூயார்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க இலக்கிய உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



    அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2011-ம் ஆண்டு, பிலிப் ரோத்துக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் தேசிய மனிதாபிமான பதக்கம் வழங்கி சிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.  #PhilipRoth #RIP
    ×