என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "amma peravai"
சாத்தூர்:
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையிலும் நாடாளு மன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் வகையிலும் விருதுநகர் மாவட்டம் மற்றும் நான்கு மாவட்டங்களில் 21 சட்டமன்ற தொகுதியில் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.
வருகிற 13-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். 14-ந் தேதி சாத்தூரில் தொடங்கும் சைக்கிள் பேரணி சாத்தூரில் உள்ள பல்வேறு குக்கிராமங்களில் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெறுகிறது.
அதனையொட்டி ராஜபாளையம் வழியாக சைக்கிள் பேரணியாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்ரீவில் லிபுத்தூரில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
14-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சைக்கிள் பேரணியாக புறப்பட்டு பல்வேறு பட்டாசு தொழி லாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துரைத்து சிவகாசி தொகுதிக்கு வந்தடைகிறது. அங்கு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கின்றனர்.
வருகிற 15- தேதி சிவகாசியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சைக்கிள் பேரணியாக சென்று விருது நகரை வந்தடைகின்றனர்.
16-ந் தேதி அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழியெங்கும் சாதனைகளை எடுத்துரைத்து காரியாப்பட்டியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர்.
சாத்தூரில் வருகிற 13-ந் தேதி நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை விருதுநகர் மாவட்ட செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டை மணிகண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், வக்கீல் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.
வேலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக புலவர் ரமேசும், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு கிருஷ்ணணும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உதயம் எஸ்.ரமேசும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ். சரவணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே. முகிலனுக்கு அம்மா பேரவை தென்சென்னை வடக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அவர் ஏற்கனவே வகித்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் அம்மா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்புக்கு ஜெயவர்த்தன் எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்