search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amma thitta mugam"

    கரூர் மாவட்டத்தில் வருகிற 14 ந்தேதி அம்மா திட்ட முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி சென்று அவர்களின் கோரிக்கைகளை வருவாய்துறையினர் நிவர்த்தி செய்யும் வகையில் அம்மா திட்ட முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 14-ந் தேதி அன்று குளித்தலை வட்டத்தில் மருதூர் தெற்கு கிராமத்தில் ஆதிநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் புன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலும், வருகிற 28-ந் தேதி குளித்தலை வட்டத்தில் கல்லடை கிராமத்தில் கீழ வெளியூர் நூலகத்திலும், அரவக்குறிச்சி வட்டத்தில் கொடையூர் கிராமத்தில் ஐந்து ரோடு ஊராட்சி அலுவலக கட்டிடத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 

    அன்றைய தினங்களில் காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில், இந்த முகாம் நடக்கிறது. 

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திருச்சி:

    பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், காலவிரயம், போக்குவரத்து செலவு விரயத்தை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

    திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம், திருச்சி மேற்கு  வட்டத்தில் பஞ்சப்பூர், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப் பாறை வட்டத்தில் முகவனூர் தெற்கு, மருங்கா புரி வட்டத்தில் செவந்தாம் பட்டி, லால்குடி வட்டத்தில் கருடாமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ராசாம் பாளை யம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூர் வட்டத்தில் பகன வாடி, தொட்டியம் வட்டத்தில் அரங்கூர் ஆகிய கிராமங்களில் நாளை  24-ந்தேதி முகாம் நடைபெறுகிறது.  

    இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
    பாடாலூர்:

    ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு ஆலத்தூர் தாலுகா சமூக நல பாதுகாப்பு திட்ட  தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தேவையான சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். 

    முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல் , வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள்கேட்டு மனுக்கள் அளித்தனர். அதில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பட்டா மற்றும் முதியோர் உதவி தொகை ஆணை வழங்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×