search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "analyze"

    கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி பாட புத்தகம் சேதம் அடைந்துள்ளது. அது பற்றி நேரில் ஆய்வு செய்வேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #gajastorm

    ஈரோடு:

    செங்குந்தர் பள்ளி கழக பவள விழா கொண்டாட்டம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. பவள விழாவின் நிறைவு நாளான இன்று செங்குந்தர் பள்ளி வளாகத்தில் பவள விழா நினைவு வளைவு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் கல்வி கழகத்தின் தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சிவானந்தன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பவள விழா நினைவு வளைவை திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செங்குந்தர் பள்ளியில் ஒரு ஆங்கில வழி வகுப்பு உள்ளது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு ஆங்கில வழப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    1 முதல் 5 வகுப்பு வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 4 புதிய இலவச சீறுடைகள் வரும் கல்வி ஆண்டில் வழங்கப்பட உள்ளது.

    6 முதல் 8 -ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்டுகிளாஸ் தொடங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு முதல் அணைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு அதில் இணையதள வசதி செய்து கொடுக்கப்படும்.

    நீட் தேர்வுக்காக 26 ஆயிரம் மாணவர்களுக்கு 412 மையங்களில் ஆன் லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டயகணக்காளர் உருவாக்கும் வகையில் பிளஸ் -2 முடித்த மாணவர்களுக்கு 500 பட்டய கணக்காளர் கொண்டு பயிற்சி அளிக்கபட உள்ளது. இதற்காக 405 பட்டய கணக்காளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

    மூச்சி நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே மாணவர்கள் முயற்சி செய்து நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

    தமிழகத்தை பொறுத்த வரை இந்தியாவுக்கே சிறந்த முன்னோடி மாநிலமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது 3 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அப்படி ஒரு எண்ணமே இல்லை. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

    அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்தந்த பள்ளி நிர்வாகிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


    கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி பாட புத்தகம் சேதம் அடைந்துள்ளது. எவ்வளவு பாட புத்தகங்கள் சேதமடைந்துள்ளது என்பதை நான் அங்கு நேரடியாக சென்ற பின்பு தான் கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெயராஜ், முருகு சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர்கள் வழங்கினர். பவள விழா மலரையும் வெளியிட்டனர்.  #ministersengottaiyan #gajastorm

    ×