search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anamalai Tigers Archive"

    பொள்ளாச்சி வனச்சரகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுரகிலோ மீட்டர் பரப்பு கொண்டது. பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி(டாப்சிலிப்), மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு புலி, சிறுத்தை, யானை, செந்நாய், காட்டுமாடு, பலவகை மான்கள், பறவைகள், ராஜநாகம் உள்ளிட்ட பலவகை பாம்புகள், அரிய வகை மூலிகைகள் என பல்லுயிரிகளின் வாழிடமாக உள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து தற்போது வனப்பகுதி முழுவதும் பசுமையாக, அடர்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள், வன விலங்கு வேட்டையர்கள் என வனப்பகுதிக்குள் தங்கவும், வனப்பகுதியை பயன்படுத்திகொள்ளவும் வாய்ப்புள்ளது.

    இதனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அனைத்து வனச்சரகங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க தலைமை வனப்பாதுகாவல் கணேசன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மற்ற வனச்சரகங்களிலும் அந்தந்த வனச்சரக அலுவலர்கள் தலைமையில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
    ×