search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andal-Rangamannar"

    • ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா தொடங்குகிறது.
    • தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    108 வைணவ கோவில்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரனது ஆண்டாள், பெரியாழ்வார் என இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து பங்குனி உத்திர நாளில் ரங்க மன்னாரை மணம் புரிந்தார் என்பது வரலாறு ஆகும்.

    ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 28-ந் தேதி

    (செவ்வாயக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி 5-ம் நாள் விழாவில் கருட சேவை நடைபெறுகிறது.

    விழாவின் உச்ச நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை செப்புத்தேரில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன்பின் பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    பின்னர் ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளும் ஆண்டாள்- ரங்கமன்னாருக்கு இரவு 7 முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருக்கல்யாண திருவிழாவிற்காக கோவிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், அறங்காவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×