என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andhiur weekly market"
- அந்தியூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
- சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தி யூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் சனிக்கிழமை மற்றும் ஞாயி ற்றுக்கிழமைகளில் கால்ந டை சந்தை நடை பெறும்.
மேலும் திங்கட்கிழமை களில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், வெற்றி லை, உள்ளிட்ட விற்பனை நடை பெறும். இந்த சந்தை க்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் வரும் 29-ந் தேதி (வியாழ க்கிழமை) பக்ரீத்பண்டிகை கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி மாவட்ட த்தின் பல பகுதி களில் இருந்து அந்தியூர் சந்தைக்கு வியாபாரி களும் விவசாயி களும் ஆடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மேலும் அந்தியூர், சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆடு களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இத னால் அந்தியூர் வார ச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
இதனால் அந்தியூர் வார ச்சந்தையில் இன்று கூட்டம் அலை மோதியது. சந்தை விறுவிறுப்பாக நடைபெற்று களைகட்டி காணப்பட்டது.
- அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
- நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பொழிந்த மழையினால் அந்தியூர் வாரச்சந்தை பகுதியில் தண்ணீர் தேங்கியது. அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காய்கறி, மளிகை சந்தை நடைபெறுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் அமைப்பதற்காக ஒரு பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவ தால் மற்றொரு பகுதியான கால்நடை சந்தை நடந்து வந்த பகுதியில் காய்கறி, மளிகை பொருட்கள் சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்