என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Andhra state"
- கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன.
- தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆந்திரா, கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர.பி.காந்த்தே, ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் கூறுகையில்:-
கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன. இதில் 18 யானைகள் தசரா விழாவில் பங்கேற்க உள்ளது. தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.
- விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
- பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார்.
பிரார்த்தனை நடந்து வரும் இடத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏழை பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி நடத்தி வருகிறார். விடுதியில் 97 மாணவ, மாணவிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஒருவர் தனது வீட்டு நிகழ்ச்சியில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாக்களை விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு கொடுத்தனர். விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.
நள்ளிரவில் விடுதியில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வரும் ஜோஸ்வா (வயது 6) என்ற மாணவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிதாபமாக இறந்தார்.
விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதிரியார் கிரண்குமார் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் ஜென்மேலி பவானி (8), சத்தா(6) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
35 மாணவ- மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் பாதிரியார் கிரண் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை மந்திரி வாங்கலடி அனிதா நேரில் சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
விடுதியில் தங்கி இருந்து இறந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அனாதை இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள் உடனடியாக மூடப்படும் என அறிவித்துள்ளார்.
- கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.
நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது.
மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், சின்ன வங்காலை சேர்ந்தவர் குருசேகர ரெட்டி (வயது 45) கூலி தொழிலாளி.இவரது மனைவி தஸ்தகீரம்மா (38). மகள்கள் பவித்ரா (16), குரு லட்சுமி (10). குருசேகர ரெட்டி குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தற்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் குருசேகர ரெட்டியின் வீட்டு மண் சுவர் மழையில் நனைந்து நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.
இதில் குருசேகர ரெட்டியின் குடும்பத்தினர் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளை அகற்ற முயன்றனர்.
போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இன்று காலை இடிப்பாடுகளை அகற்றினர். அப்போது குருசேகர ரெட்டி, அவரது மனைவி, 2 மகள்கள் பிணமாக மீட்கபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
- கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
- மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
- மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது.
இதனை கண்ட மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை கரைக்கு இழுத்து வந்தனர். கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது சுமார் 1500 கிலோ எடையுள்ள தேக்கு மீன் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மீனவர்கள் கிரேன் உதவியுடன் மீனை கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து மீனவர்கள் சென்னை வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை வியாபாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீனை வாங்கி லாரியில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.
- மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடப்பயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா.
இவர் முதலில் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மா என்பவரை பாண்டண்ணா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பாண்டண்ணாவுக்கு 2-வது குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என இரண்டாவது மனைவி தெரிவித்தார். ஆனால் பாண்டண்ணா 2-வது குழந்தை கட்டாயம் வேண்டும் என அடம் பிடித்தார்.
இதனால் மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதே ஊரை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் முழுவதும் கொடுத்தனர். தங்களது படத்துடன் கணவர் மற்றும் 3-வது மனைவி படத்தை வைத்து வரவேற்பு டிஜிட்டல் பேனர்களையும் அவர்கள் வைத்தனர். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு 3-வது திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.
கணவரின் சந்தோஷத்திற்காக 2 மனைவிகள் சேர்ந்து 3-வது திருமணம் செய்து வைத்த வாழ்த்து பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
- அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் என். டி. ஆர் மாவட்டம் விஜயவாடாவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.
பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்னிடம் போனில் பேசினார். நான் தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன்.
ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவி வேண்டுமென கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாக அவரிடம் தெரிவித்தேன். மேலும் பதவிகள் கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்.
ஒவ்வொரு எம்.பி.க்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன். அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டும். எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளுடன் பேசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் பலம் இருப்பதால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். போலாவரம், அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கேட்டு அடம்பிடிப்பதாக தகவல் வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை விரும்பவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
- சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
- சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அவர் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு சந்திரபாபு நாயுடு வெளிநாடு செல்ல அனுமதித்தனர்.
- சித்தா ராகவாராவ் வீட்டில் கடந்த வாரம் 2 பேர் நள்ளிரவு 12.45 மணியளவில் சுவர் ஏறி குதித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலுவில் உள்ள முன்னாள் அமைச்சர் சித்தா ராகவாராவ் வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் 2 கடிதங்களை வீசி சென்றார்.
அந்த கடிதங்களை பிரித்து படித்தபோது, வீட்டில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகளை அகற்ற ரூ.7 கோடி தர வேண்டும் என எழுதி இருந்தது. இதனை கண்டு முன்னாள் அமைச்சரின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு வெடிகுண்டுகள் இல்லாததால் நிம்மதி அடைந்தனர். இது தொடர்பாக வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தனர்.
அதில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வீசியவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சித்தா ராகவா ராவ் வீட்டில் கடந்த வாரம் நள்ளிரவு 12.45 மணியளவில் 2 பேர் சுவர் ஏறி குதித்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் வந்ததால் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
- ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.
ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-
கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.
ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.
இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
- வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
திருப்பதி:
மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.
அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.
கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.
அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.
4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.
வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.
பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.
இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.
இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.
இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்