search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annadana"

    • முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.
    • தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள்.

    தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது. காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

    ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம் எனவே பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

    அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள்.

    தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

    எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது.

    முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அன்று இருட்டாக இருந்தாலும் கூட அது நல்லநாளாகவே கருதப் படுகிறது.

    • மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அன்னதானம்-தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
    • ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை பசுமலையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்க ளில் தங்கியுள்ள முதி யோர்கள் மற்றும் ஆதர வற்றோருக்கு ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பா. வெற்றிவேல் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதனை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து மதுரை அழகர் கோவிலில் ஜெய லலிதா பேரவை சார்பில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யில் எடப்பாடி பழனிசாமி நீடூடி வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு செய்கின்றனர்.

    இதைத் தொடர்ந்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இதையொட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    • சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பூஜைகள் நடந்தன. அங்குள்ள காசி குருபகவானுக்கு குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வழிபாடு செய்தனர். பெரிய நாச்சி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வானவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி, செந்தில் ஆண்டவர் காசிவிஸ்வநாதர், துர்க்கை காளி, காசிஅனுமான், பைரவர், சித்தர் முத்துவடுகநாதர், நவகிரகங்கள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • நல்ல மருது நினைவு நாளில் 5000 பேருக்கு எஸ்ஸார் கோபி அன்னதானம் வழங்குகிறார்.
    • இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

    இந்த அன்னதானத்தை முன்னாள் மாநகர வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைக்கிறார்.இதில் 5000-க்கும் மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக நல்லமருதுவின் திருவுருவப்படத்திற்கு எஸ்ஸார் கோபி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    அதனை தொடர்ந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் முன்னாள் நகராட்சி சேர்மனும் மாநகராட்சி 84- வார்டு கவுன்சிலருமான போஸ் முத்தையா, அவனியாபுரம் பகுதி திமுக செயலாளர் ஈஸ்வரன்,வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற கவுன்சிலர் ராஜரத்தினம், சோலை அழகுபுரம் பகுதி துணைச் செயலாளர் கண்ணன்,வட்டக் கழக துணை செயலாளர் வழக்கறிஞர் விஜயன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

    ×