search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annadhana Special Pooja"

    • அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான பொருட்களால் மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரிஸ்வரன் செய்தார்கள்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலய குரு சித்தர் பீடத்தில் ஆடி மாத முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரிஸ்வரன் செய்தார்கள்.

    இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, பாண்டிக்குமார், பாண்டி மகாலட்சுமி, மாரியப்பன், ஆறுமுகம், முருகன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி செல்வராணி, ஜோதிலட்சுமி, சங்கரி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

    ×