search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-Narcotics Awareness Rally"

    • மாணவ, மாணவிகளின் போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை முதல்வர் ஜெயாசண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு கோஷங்களை எழுப்பி சென்றனர்.

    தூத்துக்குடி:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி 3-ம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜெயாசண்முகம் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் போதைபொருட்கள் பயன்படுத்துவதால் சாலை விபத்துக்கள், மனநலம் பாதித்தல், உடல்நலம் பாதித்தல், அதோடு மட்டுமல்லாமல் குடும்பநலமும் பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் கூறினார்.

    பின்னர் மாணவ, மாணவிகளின் போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை முதல்வர் ஜெயாசண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது காமராஜ்நகர் 1, 2, 3-வது தெருக்கள், 3-ம் மைல் தெருக்கள் வழியாக பள்ளியை மீண்டும் வந்தடைந்தது. மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு கோஷங்களை எழுப்பி சென்றனர்.

    பேரணியில் இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியை உதயம்மாள், சாரண, சாரணிய இயக்க பொறுப்பாசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் பிரியங்கா செய்திருந்தார்.

    ×