search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-tobacco"

    • புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    மதுரை

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையின ருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதை கள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்து ரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறையினர் தங்களது உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் புகையிலையால் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவ தோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப் படுகிறது? என்ப தையும் எடுத்துரைத்தார்.

    காவல் துணை ஆணையர் தலைமையிடம் மங்க ளேஸ்வரன், போக்கு வரத்து திட்ட கூடுதல் காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகி யோர் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர். 

    • தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.அதனை தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தொடங்கி வைத்தார்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை சென்று திரும்ப தொழில் பயிற்சி நிலையம் வந்தது. முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது போதை மற்றும் புகையிலை பொருட்களை ஒழித்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

    பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதை மற்றும் புகையிலை பொருள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதில் அளித்தனர். தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

    ×