என் மலர்
நீங்கள் தேடியது "appeal"
- மக்கள் திட்டப்பணிகளை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கீழக்கரை நகராட்சி சார்பில் நகர்மன்றத்தலைவர் செஹனாஸ் ஆபிதா வாழ்த்து தெரிவித்தார். துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் பேசிய தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவ டைந்துள்ளது. மக்கள் கோரி க்கைகளை நிறைவேற்ற எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும், கீழக்கரை பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று ஆதரவு தந்து கீழக்கரை மக்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் குறைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுவதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கீழக்கரை நகராட்சிக் குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் காலி இடங்களுக்கான வீட்டுமனை பட்டாக்கள் வழங்க, கீழக்கரை வட்டாட்சியர் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
நகர் பகுதியில் மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் தேவையான பணிகள் குறித்து விளக்கி பேசினர்.
கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நகர்மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார்.
கவுன்சிலர் சுகைபு:- கீழக்கரையில் வள்ளல் சீதக்காதிக்கு தனி நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும். நகராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அரசு மருத்துவமனையில் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.
கவுன்சிலர் முகம்மது காசிம்:- 14-வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்காத நிலை உள்ளது. உடனடியாக மக்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் வீடு வீடாகச்சென்று வரி வசூல் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
சப்ராஸ் நவாஸ்: ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகள் முழுமையாக எரியவில்லை. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மேற்பார்வை யாளர்கள் சம்பாசிவம், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவ லர்கள் தமிழ்ச் செல்வன், உதயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வ தற்காக கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்படுத்திடும் வகையில் திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் கடந்த ஆண்டு 169 ஊராட்சிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் அமைத்து திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 261 ஊராட்சிகளில் 284 விவசாயிகள் கொண்ட கிளஸ்டர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளிலும் செயல்ப டுத்திட திட்டமிடப் பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து பயன்பாடற்ற விளை நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை சீரமைத்து பண்ணையை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள் ளவும், தேவையான இடுபொருட்களை கூட்டுறவுத்துறை வழங்கிடும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இந்த திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தங்கள் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மக்கள் மீது சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தி.மு.க. அரசின் இத்தகைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், உடனடியாக விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் அதி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட அதி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை பெத்தானியாபுரம் திடலில் நடைபெறுகிறது.
இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெற விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொது மக்களிடம் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் இதில் தகுதியானவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் அப்படி கிடைக்கப்பெறா தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் மேல்முறையீடு செய்து பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், எம் பி அண்ணாதுரை எம் எல் ஏ சரவணன், ஒன்றிய செயலாளர் ராமஜெயம்,
ஒன்றிய குழுத்தலைவர். தமயந்தி ஏழுமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
- ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.
சென்னை:
நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பின் நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.
அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு வரும் ஜனவரி 2ம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளார்.
- திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
- கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது
திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் இருந்த ரகசிய உறவவை மறைக்க ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு (இந்திய மதிப்பில்) ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து அவர் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நேற்று (மே 31) நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
இது அரசியல் சூனிய வேட்டை என்று தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், தான் நிரபராதி என்றும் அரசியல் கைதியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனுக்கு எதிராக வலுவான போட்டியாளராக டிரம்ப் பார்க்கப்படுகிறார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த மோசடியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். தான் நிரபராதி என நிரூபிக்க முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான தண்டனை விபரங்கள் வரும் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
- சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்தது.

இந்த நிலையில் சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.
- ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என்று அமலாக்கத்துறை அதன் மனுவில் புகார் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஜனவரி 31ம் தேதி கைது செய்திருந்தனர்.
பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின்படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
- ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்
சென்னை:
குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.
இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

இந்த வழக்கில் இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக காவல்துறையில் சிறப்பான அதிகாரிகள் இருக்கும்போது, இந்த வழக்கு ஏன் சிபிஐக்கு மாற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதில், பொன் மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். #PonManickavel #IdolWing