search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple WWDC 2023"

    • இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) துவங்கியது. ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் துவங்கிய WWDC 2023 நிகழ்வில் புதிய லேப்டாப், பிராசஸர், ஒஎஸ் வெர்ஷன்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. அந்த வகையில், 2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    15-இன்ச் மேக்புக் ஏர்: 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் மாடல் ஆகும். முழு சார்ஜ் செய்தால் இந்த லேப்டாப்பை அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன.

    மேக் ஸ்டூடியோ: ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் மற்றும் M2 அல்ட்ரா சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேக் ப்ரோ: யாரும் எதிர்பாராத நிலையில், ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் மூலம் அப்டேட் செய்து இருக்கிறது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹார்டுவேரை தொடர்ந்து சாஃப்ட்வேர் அறிவிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறலாம்.

    ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ்-இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய ஆஃபர் வழங்கப்படுகிறது.

    விஷன்ப்ரோ ஹெட்செட்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும். இந்த சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்புடன், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. 

    • புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ மாடலின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வில் தனது மேக் ப்ரோ மாடலை முற்றிலும் புதிய M2 அல்ட்ரா சிப்செட் உடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மேக் ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மூன்று மடங்கு அதிவேகமானது ஆகும். M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ மாடலில் 24-கோர் சிபியு மற்றும் 76-கோர் ஜிபியு, இருமடங்கு ரேம் மற்றும் எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் வாங்கிட முடியும். இத்துடன் அதிகபட்சம் ஏழு ஆஃப்டர்பர்னர் கார்டுகள் புதிய மேக் ப்ரோவில் வழங்கப்பட்டு உள்ளன. இது 8K ப்ரோ ரெஸ் தரம் கொண்ட 22 வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இதில் நான்கு தண்டர்போல்ட் 4 போர்ட்கள் உள்ளன.

    இந்த மேக் ப்ரோ மாடல் ஆறு ப்ரோ டிஸ்ப்ளே XDR-க்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி ஏ போர்ட்கள், இரண்டு அதிக பேண்ட்வித் கொண்ட HDMI போர்ட்கள், இரண்டு 10GB ஈத்தர்நெட் போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ (டவர் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் மேக் ப்ரோ (ரேக் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    • புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். செயலிகளை சப்போர்ட் செய்கிறது.
    • குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் WWDC 2023 நிகழ்வில் வைத்து அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் பற்றிய தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும்.

    இதுதவிர ஆப்பிள் உருவாக்கி இருக்கும் ஐசைட் (Eyesight) எனும் அம்சம் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் ஹெட்செட் உள்புறத்தில் இருக்கும் கேமராக்களை கொண்டு ஹெட்செட் பயன்படுத்துவோரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு பயனர்கள் எந்த அளவுக்கு மெய்நிகர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் அனைவரின் தலையிலும் எளிதில் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் இந்த ஹெட்செட்-இன் ஹெட் பேண்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அணிபவருக்கு மென்மையாகவும், அதிக சவுகரியத்தை கொடுக்கும் வகையிலும், எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலும் இருக்கிறது.

    விஷன் ப்ரோ மாடலின் ஹெட்பேண்ட்-இல் டூயல் டிரைவர் ஆடியோ பாட்கள் உள்ள. இவை பயனர்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோ தொழிநுட்பத்தை வழங்குகின்றன. ஹெட்செட் எடையை மேலும் குறைப்பதற்காக விஷன் ப்ரோ மாடலில் வெளிப்புற பேட்டரி யூனிட் உள்ளது. வயர் மூலம் பேட்டரி மற்றும் ஹெட்செட் இணைக்கப்பட்டு உள்ளது.

    கேமராவை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் மூன்று எலிமெண்ட் லென்ஸ்கள், ஹை-ரெஸ் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் இரண்டு IR கேமராக்கள், LED இலுமினேஷன்கள் உள்ளன. இந்த சாதனம் LiDAR மற்றும் வழக்கமான கேமரா சென்சார்களையும் பயன்படுத்துகிறது. இந்த ஹெட்செட் ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இது முற்றிலும் புதிய R1 சிப் மற்றும் M2 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    சஃபாரி போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே, நிஜ உலகில் மனிதர்களுடன் உரையாட முடியும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ சாலைகளிலும் பயன்படுத்த முடியும். விஷன் ப்ரோ ஹெட்செட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிக கேம்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

    • புதிய ஐஒஎஸ்-இல் சிரி சேவையை இயக்க ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதும்.
    • புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டது. புதிய ஐஒஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி இன்கமிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதை போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.

    மெசேஜஸ் அம்சத்தில் மிக எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இத்துடன் ஃபேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். இத்துடன் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும்.

    சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். இதே போன்று புகைப்படங்களையும் மிக எளிதில் ஷேர் செய்யலாம்.

    புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏ.ஐ. சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஒஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. புதிய ஐஒஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும். 

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ×