search icon
என் மலர்tooltip icon

    கணினி

    M2 சிப்செட் கொண்ட முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலை அறிமுகம் செய்த ஆப்பிள்
    X

    M2 சிப்செட் கொண்ட முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலை அறிமுகம் செய்த ஆப்பிள்

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×