search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appointing"

    • நாமக்கல் மாவட்டத்தில் 100 காலியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு உத்தரவிட்டுள்ளது.
    • பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, நடுநிலை, உயா்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவா்களுக்கு முன்னுரிமை வழங்கவும், அதன்பிறகு, ஆசிரியா் பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், கொல்லிமலை ஒன்றியத்தில் 41 காலியிடங்களும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 9 இடங்களும், இதர ஒன்றியங்களில் 21 பணியிடங்கள் என மொத்தம் 71 இடங்களில் இடைநிலை ஆசிரியா்களை பணியமா்த்தவும், 15 பட்டதாரி ஆசிரியா்கள், 14 முதுநிலை ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

    அந்தந்த ஒன்றியத்திற்கு உள்பட்டவா்கள் காலியிடங்கள் உள்ள பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக அறிந்து தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம், சான்றிதழ்களை வழங்கி, தங்களுடைய பாடப்பிரிவுக்கான பணியிடம் காலியாக இருப்பின் வேலைவாய்ப்பு கோரலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசின் மனு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். #SupremeCourt #Lokpal
    புதுடெல்லி:

    ஊழல் புகார்களை விசாரிக்கும் ‘லோக்பால்’ அமைக்குமாறு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், லோக்பால் இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசுக்கு எதிராக ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தாக்கல் செய்த பிரமாண மனுவில், “லோக்பால் உறுப்பினர்களை சிபாரிசு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்காக, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. ஆனால், தேடுதல் குழு இறுதி செய்யப்படவில்லை. இதற்காக விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    அதைப்படித்த நீதிபதிகள், மத்திய அரசின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். 4 வாரங்களுக்குள் சிறப்பான பிரமாண மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #SupremeCourt #Lokpal
    ×