என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Appointmetn Letters"
- பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
- ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார் பிரதமர்
புதுடெல்லி:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி இதுவரை 3 கட்டங்களாக சுமார் 2.18 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறிய அவர், துறைமுகத் துறை மற்றும் சுகாதாரத் துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றார். விவசாயத் துறையில் பண்ணை இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.