search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Rahman"

    • ஆடுஜீவிதம் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
    • இந்த படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பயணம்.

    உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள படம் தி கோட் லைஃப் ஆடுஜீவிதம். பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

    மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை பிளெஸ்ஸி படமாக இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

     


    இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசிய பிருத்விராஜ், "இந்தப் படம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால பயணம். 2008-ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, 'நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்' எனக் கூறினார்."

    "2009 ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. 2022 இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது. மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை. இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி."

    "படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு," என்று தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்
    • ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன

    இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் - ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ஆர்.சி. 16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

    இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில், ராம் சரண், ஜான்வி கபூர், சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றன.

    இப்படத்தின் பூஜை தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை படக்குழு எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    தற்போது ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
    • முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட் தொடர் எனலாம். கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக ஐ.பி.எல். பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். துவக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

     


    2024 ஐ.பி.எல். தொடரின் துவக்க விழா சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான், சோனு நிகம், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து இந்த சீசனின் முதல் போட்டி துவங்கும். அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    • சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி
    • அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    "கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில், ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது" என பாடலாசிரியர் சினேகன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த 'காளி', 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.

    அடுத்ததாக இவர் 'காதலிக்க நேரமில்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரொமான்ஸ் படமான இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

    • ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
    • ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.

    சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம்.

    இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது காரில் வந்து இருந்தார். தர்காவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

     அப்போது ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ரோட்டிலும் திரண்டு நின்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் வந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.

    இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும்
    • சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படத்தை இயக்குநர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது

    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம் என்று சொல்லப்படுகிறது. பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில் அண்மையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பிருத்விராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.


    இந்த ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஆடு ஜீவிதம் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தன் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'திமிறி எழுடா' என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடியுள்ளனர். ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை 'லால் சலாம்' பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.


    இந்த ஜூக் பாக்ஸை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை அவர்களின் குடும்பங்களின் அனுமதியோடு தான் பயன்படுத்தினோம். இதற்கான தொகையும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தொல்லை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.



    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இந்த திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள இந்த பாடலில் 'ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    ×