search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrst"

    • சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்சுகள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
    • 36 வயதான மார்சின் பானோட் இதற்கு முன்பு வேறு சில நாடுகளிலும் இதுபோன்று சாகசங்களை முயற்சி செய்துள்ளார்.

    போலந்து நாட்டின் பியுனஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள 30 மாடி கட்டிடம் ஒன்றில் கயிறுகள் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமலேயே வெறும் கைகளால் ஏற முயன்ற வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அதில், அர்ஜென்டினா கால்பந்து ஜெர்சி அணிந்திருந்த மார்சின் பானோட் என்ற வாலிபர் அங்குள்ள 30 மாடி கட்டிடத்தில் ஏறும் காட்சிகள் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கைகளால் கட்டிட சுவர்களை பிடித்து ஸ்பைடர்மேன் போன்று கட்டிடத்தில் ஏறிய அவரின் சாகச செயலை அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்சுகள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 25-வது மாடியில் ஏறிக்கொண்டிருந்த மார்சின் பானோடை தடுத்து நிறுத்தி கீழே இறக்கி கைது செய்தனர்.

    36 வயதான மார்சின் பானோட் இதற்கு முன்பு வேறு சில நாடுகளிலும் இதுபோன்று சாகசங்களை முயற்சி செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இவரை பல ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் நிலையில், அதில் மேலும் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே அவர் இது போன்ற சாகசங்களை செய்வது தெரிய வந்துள்ளது.

    தேனியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருடிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    தேனி:

    தேனி கோட்டைக்களம் நேருஜி தெருவை சேர்ந்தவர் சுப்புரத்தினம் (வயது73). தொழிலதிபரான இவர் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த சுமார் 66 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து சுப்புரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கிரி (46), தேனி நியூ ஸ்ரீராம் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (38) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    ஆத்தூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்யி மினி வேனை பறிமுதல் செய்த போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கல்பகனூர் வசிஷ்ட ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் செல்வன், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் மது ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளியதாக 4 மாட்டு வண்டிகள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
    ×