என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arunthaminkambi"
- திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தில் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன.
- வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.
திட்டக்குடி, ஏப்.26-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த அங்கம்மாள், ஈஸ்வரி, வள்ளி ஆகியோரின் 3 பசு மாடுகள் நேற்று வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் மேய்ந்து வந்தன. இரவு வெகுநேரமாகியும் பசுமாடு மீண்டும் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடினர். ஆனால், மாடுகள் கிடைக்கவில்லை
இந்நிலையில் இன்று அதிகாலை கொரக்கையிலிருந்து ஆலம்பாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஒரமாக உள்ள வயல்வெளியில் தேடிப்பார்த்த போது வாகையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வயலில் மின்கம்பி அறுந்து கிடந்து அதில் 3 மாடுகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும், அதன் அருகே 2 குரங்குகளும் சிக்கி பலியாகி இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜமாணிக்கம் தனது வயல்வெளிக்கு மின்சாரம் தேவையில்லை என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சி யத்தால் 3 பசு மாடு மற்றும் 2 குரங்குகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.