என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashok Chavan"
- நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அடுத்த நாள் பா.ஜனதாவில் இணைய இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.
மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு அசோக் சவான் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். மேலும் அசோக்சவான் பா.ஜனதா கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் இன்று அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம். இன்று நான் பா.ஜ.க.வின் அலுவலகத்தில் முறைப்படி இணைகிறேன். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும்.
- அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
அவுரங்கபாத் :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக கட்சி அலுவலகத்தை திறப்பதற்கான நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் பாலசாகேப் தோரட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அசோக் சவான் தன்னை பற்றி நிலவும் ஊகங்களுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், "இதுபோன்ற கருத்துகளுக்கு இயல்பாகவே நான் எந்த விளக்கமும் அளிக்க தேவையில்லை. சங்கர்ராவ் சவான் (அசோக் சவானின் தந்தை மற்றும் முன்னாள் முதல்-மந்திரி) காலத்தில் இருந்தே நாந்தெட் மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியுடன் பின்னி பிணைந்தது" என்றார்.
காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், " அசோக் சவான் கட்சியை விட்டு விலகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் தினமும் பதில் சொல்ல நேரிடுகிறது. இது மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சூழலை கெடுக்கும் முயற்சியாகும். அசோக் சவான் கட்சியை விட்டு வெளியேறமாட்டார். நாங்கள் அவரை எப்போதும் நம்புகிறோம்" என்றார்.
இதேபோல பாலசாகேப் தோரட், " இதுபோன்ற யூகங்களால் அசோக் சவான் கவலையடைந்துள்ளதாகவும், கட்சியை கட்டியெழுப்பவும், வலுப்படுத்தவும் அவரின் ஆளுமை தேவை என்றும் கூறினார்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். சமீபத்தில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்கரி, விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசினார். ‘சுமார் 40 ஆண்டுகள் அவர் வாங்கிய கடனுக்கு ஒழுங்காக வட்டி செலுத்தி வந்ததாகவும், ஒருமுறை தவறு செய்ததற்காக அவரை திருடன் போல் பார்க்கக்கூடாது’ என்றும் கூறி நிதின் கட்கரி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதின் கட்கரி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, வால்யா என்ற திருடன் மனம் திருந்தி வால்மீகி ஆனதுபோல், பா.ஜனதாவில் குற்றவாளிகள் சேர்ந்தாலும் அவர்கள் மனம் திருந்தி விடுவார்கள் என்றார். இது விஜய் மல்லையாவை வால்மீகி ஆக்கும் முயற்சி என்று நினைக்கிறேன்.
பா.ஜனதாவின் ஆதரவுடன் மல்லையா 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் பா.ஜனதாவிலேயே இணையப்போகிறாரா?
இவ்வாறு அவர் கூறினார். #AshokChavan #VijayMallya #NitinGadkari
ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று தனது பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என குறிப்பிட்டு இருந்தது. பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி பாடப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்துக்கான தீயை பற்ற வைத்தவர்களுள் ஒருவரான திலகரை பயங்கரவாதத்தின் தந்தை என பாடப்புத்தகங்களில் குறிப்பிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட கோடிக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பா.ஜனதா கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்