search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashoknagar"

    அசோக்நகரில் கஞ்சா பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அசோக் நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உசேன் என்கிற ஜாகிர் உசேன் என்பவரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகளான தீன் முகமது மற்றும் அவரது மனைவி சுந்தரி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மாதவரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அசார் என்ற அசாருதீன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கேரளாவை சேர்ந்த இவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையிலுள்ள அரசு பாலிடெக்னிக் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றத்தை சேர்ந்த அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அசோக்நகர் துணிக்கடையில் பட்டு புடவைகளை நூதன முறையில் திருடிய பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் அசோக் நகர் 10-வது அவின்யூவில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை 4 பெண்கள் கடைக்கு வந்து பெண் ஊழியரிடம் விலை உயர்ந்த பட்டு புடவைகளை காட்ட சொல்லி பார்த்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புடவை வாங்காமல் சென்று விட்டனர்.

    அப்போது அங்கிருந்த புடவைகளை பெண் ஊழியர் அடுக்கியபோது 16 பட்டு புடவைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து குமரன் நகர் போலீசில் உரிமையாளர் கோபால் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண்கள் தங்களது ஆடைக்குள் பை தைத்து அதில் சேலைகளை வைத்து நூதனமான முறையில் திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அசோக்நகரில் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதி மற்றும் கிளப்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அசோக் நகர் 4-வது அவின்யூவில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலாஜி, ரவிக்குமார், தீனதயாளன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×