search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assault charges"

    • அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
    • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.

    டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

    இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.

    அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    ×