search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "at Erode"

    • 75-வது சுதந்திரதினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் தேசியகொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஆரஞ்ச், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண பலூனை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 பேர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேர், துணை இயக்குனர் குடும்ப நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றி 15 பேர், இணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ×